Home செய்திகள் இந்தியச் செய்திகள் அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் மரணம்: சோனியா – ராகுல் இரங்கல்

அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் மரணம்: சோனியா – ராகுல் இரங்கல்

4080ae4f-95d8-4a47-bbd6-d629c4392139_S_secvpfஅசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக இருந்து வந்தவர் அஞ்சன் தத்தா (வயது 64). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று அதிகாலையில் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.

டெல்லியில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு சிறப்பு விமானம் மூலம் அஞ்சன் தத்தாவின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உடல் கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஞ்சன் தத்தாவின் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளனர்.

முன்னதாக சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அஞ்சன் தத்தாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.