Home செய்திகள் இலங்கைச் செய்திகள் கச்­ச­தீவை கோர­மு­டி­யா­து

கச்­ச­தீவை கோர­மு­டி­யா­து

_c2fd7d12-f834-11e5-860d-a0ffe8a3a28fகச்­ச­தீவை மீண்டும் இலங்­கை­யி­ட­மி­ருந்து யாரும் உரிமை கோரமுடி­யாது. கச்­ச­தீவு என்­பது இரண்டு நாடு­க­ளுக்கு இடையில் தீர்க்­கப்­பட்ட விவ­கா­ர­மாகும். அதனை மீண்டும் கிளறமுடி­யாது. இந்­திய உச்­ச­நீ­தி­மன்றம் அது தொடர்பில் தெளிவான தீர்ப்பை அளித்­துள்­ளது. அந்­த­வ­கையில், யாரும் கச்­சத்­தீவை கேட்க முடி­யாது என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.

கச்­ச­தீவை இந்­தியா மீளப்­பெற வேண்டும் என்று தமி­ழக முதல்வர் ஜெய­ல­லிதா நீண்­ட­கா­ல­மாக கோரி­வ­ரு­கின் றார். ஆனால் அது முடி­யாத காரியம் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை

அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

கச்­ச­தீவை இலங்­கை­யி­ட­மி­ருந்து மீண்டும் பெற்­றுக்­கொள்ள இந்­திய மத்­திய அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்று தமி­ழக முதல்வர் ஜெய­ல­லிதா இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி­யிடம் கோரிக்கை விடுத்­துள்­ள­தா­கவும் இது தொடர்பில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்­ன­வென்றும் கேள்வி எழுப்­பப்­பட்­டது.

அமைச்சர் தொடர்ந்து பதி­ல­ளிக்­கையில்

பதில் கச்­ச­தீவை இந்­தியா மீளப்­பெற வேண்டும் என்று தமி­ழக முதல்வர் ஜெய­ல­லிதா நீண்­ட­கா­ல­மாக கோரி­வ­ரு­கின்றார். அது முடிந்­து­போன விட­ய­மாகும். அதனை மீண்டும் இலங்­கை­யி­ட­மி­ருந்து யாரும் உரிமை கோர முடி­யாது. கச்­ச­தீவு என்­பது இரண்டு நாடு­க­ளுக்கு இடையில் தீர்க்­கப்­பட்ட விட­ய­மாகும். அதனை மீண்டும் கிளற முடி­யாது. இந்­திய உச்­ச­நீ­தி­மன்றம் அது தொடர்பில் தெ ளிவான தீர்ப்பை அளித்­துள்­ளது. அந்­த­வ­கையில் யாரும் கச்­சத்­தீவை கேட் க முடி­யாது. இது மீண்டும் கிள­றப்­பட முடி­யாத வகையில் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட ஒரு­வி­ட­ய­மாகும் என்றார்.

நேற்று முன்­தினம் டில்­லியில் பிர­தமர் மோடியை சந்­தித்­தி­ருந்த தமி­ழக முதல்வர் ஜெய­ல­லிதா கச்சதீவை இலங்கையிடமிருந்து மீண்டும் பெற்றுக்கொள்ள இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.