Home செய்திகள் இலங்கைச் செய்திகள் சோம­வன்ச கால­மானார்

சோம­வன்ச கால­மானார்

_c2fd7d12-f834-11e5-860d-a0ffe8a3a28f

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் முன்னாள் தலை­வரும் மக்கள் சேவை கட்­சியின் தற்­போ­தைய தலை­வ­ரு­மான சோம­வன்ச அம­ர­சிங்க 73 வயதில் நேற்­று­காலை ராஜ­கி­ரி­யவில் உள்ள தனது இல்­லத்தில் கால­மானார். அன்­னாரின் பூத­வுடன் களுத்­து­றையில் உள்ள அவ­ரது இல்­லத்­துக்கு எடுத்­து­செல்­லப்­பட்­டுள்­ளது .

மக்கள் விடு­தலை முன்­னையின் முன்னாள் தலை­வரும் மிக நீண்­ட­கா­ல­மாக தலை­மைப்­பொ­றுப்பில் இருந்த தலை­வ­ரு­மான சோம­வன்ச அம­ர­சிங்க நேற்று அதி­கா­லையில் கால­மானார். 73 வய­தாகும் சோம­வன்ச கடந்த சில கால­மா­கவே சுக­வீ­ன­முற்று இருந்த நிலை­யி­லேயே நேற்று கால­மானார்.

1943ஆம் ஆண்டு களுத்­துறை மாவட்­டத்தில் பிறந்த சோம­வன்ச அம­ர­சிங்க களுத்­துறை மகா வித்­தி­யா­ல­யத்தில் கல்­வி­கற்றார். பின்னர் 1969ஆம் ஆண்டு மக்கள் விடு­தலை முன்­ன­ணியில் தன்னை ஒரு உறுப்­பி­ன­ராக இணைத்­துக்­கொண்டார். 1971ஆம் ஆண்டு மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் எழுச்சிப் போராட்ட (ஜே.வி.பி) கிளர்ச்­சியில் தன்னை ஒரு இளம் நப­ராக இணைத்­துக்­கொண்டார். அப்­போ­ராட்­டத்தில் போது கைது­செய்­யப்­பட்டு இரண்டு ஆண்­டுகள் சிறையில் இருந்தார். விடு­த­லையின் பின்னர் தன்னை ஒரு அர­சியல் பாதையில் இணைத்­துக்­கொண்ட சோம­வன்ச காலப்­ப­கு­தியில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் அர­சியல் குழு­விலும் முக்­கிய உறுப்­பி­ன­ராக செயற்­பட்டார்.

பின்னர் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் இரண்­டா­வது போராட்ட காலத்தில் அப்­போ­தைய சிரேஷ்ட தலை­வர்கள் கொல்­லப்­பட்ட நேரத்தில் உயிர் தப்­பிய ஒரே நபரும் இவ­ராவார். பின்னர் நாட்டை விட்டு வெளி­யேறி சில காலம் தலை­ம­றை­வாக கட்­சியை வழி­ந­டத்தி வந்தார். மேலும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நான்­கா­வது தலை­வ­ராக 1990ஆம் ஆண்டு பெப்­ர­வரி 2ஆம் திகதி நிய­மி­கப்­படார்.

அன்றில் இருந்து இரு­பது வரு­ட­காலம் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வ­ராக சோம­வன்ச செயற்­பட்டார்.

பின்னர் 1990ஆம் ஆண்­டி­லி­ருந்து இருந்து கட்­சியின் தலைமை பொறுப்பை ஏற்­றுக்­கொண்டு அர­சியல் நகர்­வு­களில் பய­ணிக்­கவும் தயா­ரானார். கடந்த இரு­பத்து ஐந்து ஆண்­டு­களில் மக்கள் விடு­தலை முன்­னணி பல­மான ஒரு அர­சியல் கட்­சி­யாக செயற்­ப­டவும் தமது அர­சியல் பாதையை ஜன­நா­யக ரீதியில் அமைத்­துக்­கொள்­ளவும் சோம­வன்ச அம­ர­சிங்­கவின் பங்கு முக்­கி­ய­மா­ன­தாக அமைந்­தது.

குறிப்­பாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் யுத்தம் உக்­கிரம் அடைந்­தி­ருந்த நிலையில் அப்­போ­தைய அர­சாங்­கத்­துடன் கைகோர்த்து யுத்­தத்தை முன்­னெ­டுப்­ப­தற்கும் பங்­க­ளிப்பு வழங்­கு­வதில் தமது கட்­சியை இணைத்­துக்­கொண்டார்.

எனினும் அதன் பின்னர் கட்­சிக்குள் ஏற்­பட்ட குழப்­பங்கள், தலை­மைத்­து­வ­துடன் ஏற்­பட்ட முரண்­பா­டுகள் கார­ண­மாக 2015ஆம் ஆண்டு சோம­வன்ச அம­ர­சிங்க மக்கள் விடு­தலை முன்­ன­ணியில் இருந்து வெளி­யேறி மக்கள் சேவை கட்­சியை உரு­வாக்­கினார்.

ஜே.வி.பி யின் நிறு­வு­ன­ரான ரோஹன விஜ­ய­வீ­ர­விற்கு பின்னர் கட்­சியில் மிக நீண்­ட­கால தலைமை பொறுப்பை வகித்­தவர் என்ற புகழும் சோம­வன்­ச­வுக்கே உள்­ளது. அதேபோல் கட்­சியில் இருந்து வெளி­யே­றிய சோம­வன்ச கடந்த பொதுத் தேர்தலில் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

கடந்த காலத்தில் இடதுசாரி தலைவராக செயற்பட சோமவன்சவுக்கு கியூபா, சீனா, ரஷ்யா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளினதும் ஏனைய இடதுசாரி நாடுகளில் இருந்தும் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளனர்.