Home அறிவித்தல்கள் பிர­பல மிரு­தங்க வித்­துவான் வி.ஜம்­பு­நாதன் கால­மானார்

பிர­பல மிரு­தங்க வித்­துவான் வி.ஜம்­பு­நாதன் கால­மானார்

christmas_moon_002பிர­பல மிரு­தங்க வித்­துவான் வி.ஜம்­பு­நாதன் (வயது 53) சுக­யீ­ன­முற்­றி­ருந்த நிலையில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கால­மானார். 2006ஆம் ஆண்டு முதல் இற்­றை­வரை கட்­புலன் மற்றும் அரங்­காற்­றுக்­கலை பல்­க­லைக்­க­ழ­கத்தில் மிரு­தங்க போத­னா­சி­ரி­ய­ராகக் கட­மை­யாற்­றிய இவர் யாழ்ப்­பா­ணத்தை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்­டி­ருந்தார்.
1974ஆம் ஆண்டு மிரு­தங்க அரங்­கேற்றம் செய்த இவர் அதன் பின்னர் ஏரா­ள­மான கலை­நி­கழ்ச்­சி­களில் பங்­கு­கொண்டு மிரு­தங்க வித்­து­வா­னாக பிர­கா­சித்­தார். அது மட்­டு­மின்­றி பெரும் எண்­ணிக்­கை­யி­லான மிரு­தங்க மாண­வர்­களை உரு­வாக்­கி­யுள்ள பெரு­மை­யும் இவ­ரையே சேரும்.
இந்­தியா, நோர்வே உட்­பட வெளி­நா­டு­களில் இடம்­பெற்ற கலை­நி­கழ்ச்­சி­களில் மிரு­தங்கம் வாசித்­தவர். யாழ். பல்­க­லைக்­க­ழகத்தில் 1981ஆம் ஆண்டு மிரு­தங்­கத்தில் டிப்­ளோமா பட்டம் பெற்ற இவர் அதே ஆண்டு யாழ். பல்­க­லைக்­க­ழகம் இசைக்­க­லை­மணி பட்­டத்தை வழங்கி கௌர­வித்­தது.
2004 ஆம் ஆண்டு சர்­வ­தேச சாஸ்தா பீடம் லய­கான கலா­நிதி பட்­டத்­தையும் 2007இல் கலா­சார திணைக்­களம் வரு­டத்தின் சிறந்த கலைஞர் விரு­தையும் ஆலா­பனா சங்­கீத சபா 2010 இல் இசைச்­செல்வர் விரு­தி­னையும் ஜம்­பு­நா­த­னுக்கு வழங்கி கௌரவித்தது.
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாப னத்தின் வாத்தியக்குழுவிலும் இவர் இணைந்து பணியாற்றியுள்­ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.