Home செய்திகள் இலங்கைச் செய்திகள் புதிய அர­சியலமைப்பு எவ்­வாறு அமை­யும்?

புதிய அர­சியலமைப்பு எவ்­வாறு அமை­யும்?

_c2fd7d12-f834-11e5-860d-a0ffe8a3a28f

எமது நாட்­டுக்குப் பொருந்தும் வகை­யி­லான அர­சி­ய­ல­மைப்­பொன்று அவ­சி­ய­மா­க­வுள்­ளது. எனவே சக­ல­ரதும் உரி­மை­களை பாது­காக்கும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கி ஏக­ம­ன­தாக பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றுவோம் என அமைச்சர் சந்­திம வீரக்­கொடி தெரி­வித்தார்.

இரண்டு வரு­டங்கள் நிறை­வ­டையும் வரையில் அர­சாங்­கத்தை மாற்­று­வ­தற்­கான முயற்­சிகள் எத­னையும் சுதந்­திரக் கட்சி முன்­னெ­டுக்­காது. மாறாக நாட்டின் அபி­வி­ருத்­தியின் பொருட்டுஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்த ஆட்­சி­யை­யையே முன்­னெ­டுப்போம் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

கொழும்பில் அமைந்­துள்ள மேல்­மா­காண முத­ல­மைச்­சரின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­துக்­கொண்டு உரைா­யற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்,

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தற்­போது நாட்டின் பிர­தான இரண்டு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்­கத்தின் கீழ் ஆட்சி செய்­து­வரும் நிலையில் அதன் கீழ் பல்­வேறு அர­சியல் தீர்வு திட்­டங்கள் குறித்து ஆரா­யப்­பட்டு வரு­கின்றோம். அதி­லி­ருந்து வேறு­பட்ட சிந்­த­னை­களை கொண்டு நிதி அமைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டது.

இது அவ­ருக்கு மாத்­தி­ர­மா­ன­தல்ல முழு அர­சாங்­கத்­தையும் சார்ந்­தது என்­பதே சுதந்­திர கட்­சியின் நிலைப்­பாடு. இரு கட்­சி­களும் இணைந்து தனி­யாக ஆட்சி செய்­வ­தை­விட நாட்டின் அபி­வி­ருத்­தியின் பொருட்டு கூட்­டாக ஆடசி செய்­யுங்கள் என்று மக்­களே ஆணை­யிட்­டனர். அதன் பிர­காரம் சுதந்­திர கட்­சியும் மத்­திய குழு கூட்ட்தின் போது மக்­களின் ஆணைக்­க­மை­வாக செயற்­பட வேண்டும் என்று தீர்­மா­னிக்­கப்ட்து.

இன்று ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து இரு வரு­டங்கள் ஆட்சி செய்ய முன்­வந்­துள்ளோம். கடந்த காலத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ கட்­சியின் தலை­வ­ராக இருந்தார். பின்னர் அவர் தனது தலைவர் பத­வியை ஏக­ம­ன­தா­கவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கொடுத்தார். அதனால் கட்­சியின் தலை­மைத்­துவம் முகம்­கெ­டுக்கும் தீர்­மா­னங்­க­ளுக்கு இணங்கி நாம் செயற்­ப­டுவோம்.

ஆனால் இது­போன்று என்றும் அவரே தலை­வ­ராக இருக்­க­மாட்டார். அதன் பின்னர் வேறு ஒரு தலை­மைத்­துவம் உரு­வாகும். அவ்­வாறு வேறு ஒருவர் வந்த பின்னர் தலைவர் என்ற வகையில் அவரின் கீழேயே நாம் செயற்­ப­டுவோம். இவ்­வாறு சிறந்த அர­சியல் பய­ணத்தை கொண்­டுள்ள சுதந்­திர கட்­சியை உடைக்க பலர் முயற்­சிக்­கின்­றனர்.

இன்று சுதந்­திர கட்­சியை உடைக்க முற்­ப­டு­ப­வர்­களில் பலர் ஐக்­கிய தேசிய கட்­சி­யி­லி­ருந்து விலகி வந்­த­வர்கள். அவர்கள் ஐக்­கிய தேசிய கட்­சியில் இருந்த போது அந்த கட்­சியின் செயற்­பா­டு­களை குழப்­பி­ய­வர்கள். அதேபோல் இன்று அவர்­களே சுதந்­திர கட்­சியின் அர­சியல் பய­ணத்­திலும் குழப்பம் செய்­கின்­றனர். இங்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல மற்றும் காமினி லொகுகெ ஆகியோர் குறிப்­பி­டத்­தக்­க­வர்கள்.

நாம் எமது கட்­சியின் கொள்­கைக்கு அமை­வாக தேசிய அர­சாங்­கத்தில் இணைந்­தி­ருப்போம். அது­வ­ரையில் தற்­போது உள்ள அர­சாங்­கத்தை கவிழ்த்து தனி­யான சுதந்­திர கட்சி ஆட்­சியை அமைக்க ஒரு­போதும் முயற்­சிக்க மாட்டோம். மாறாக தற்­போ­தைய தேசிய அர­சாங்­கத்தில் பங்­கு­வ­கித்து அதன் கீழான நாட்டின் அபி­வி­ருத்­திக்­கான உந்து சக்­தி­யாக இருக்­கவே எதிர்­பார்­துள்ளோம்.

எவ்­வா­ற­யினும் எமது நாட்­டுக்கு சக்­தி­மிக்­க­தான இரண்டு கட்­சி­களும் அவ­சியம். அண்­மையில் நிதி அமைச்­சரை இலக்கு வைத்து அர­சாங்­கத்தின் மீது கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை தோற்­க­டிக்­கப்­பட்­டதால் எமது கொள்­கை­யி­னதும் தேசிய அர­சாங்­கத்­தி­னதும் நிலைப்­பாட்டை நாட்­டுக்கும் முழு உலக்த்­திற்­குமே காண்­பித்­துள்ளோம்.

இந்த அர­சாங்த்­தினால் மக்­க­ளுக்கு என்ன கிடைக்கும். என்ற கேள்­விகள் இருந்­தன. அதனால் நாட்­டிற்கு தேவை­யான அர­சி­ய­ல­மைப்­பொன்றை உரு­வாக்கி அதனை ஏக மன­தாக பாரா­ளு­ம­னத்தில் நிறை­வேற்­றிக்­கொள்­வ­தற்­காக முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது. அதேபோல் தேர்தல் முறையில் கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தாக கூறிய மாற்­றங்­களும் விரைவில் இடம்­பெறும்.

இந்த மாற்­றங்­களை சட்­ட­மூ­ல­மாக்கி பாரா­ளு­மன்­றத்தில் ஏக­ம­ன­தாக நிறை­வேற்றிக் காட்­டுவோம். இந்த அர­சி­ய­ல­மைப்­பா­னது உலக நாடுகள் பல­வற்­றி­னது அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் ஆர­ராய்து பார்த்து அதி­லி­ருந்து பெற்­றுக்­கொள்ளும் படிப்­பி­னை­க­மை­வாக எமது நாட்­டிற்கு பொருத்­த­மான உரு­வாக்­கப்­படும்.

அதே­நேரம் எமது அர­சாங்­கத்­திலும் தவ­றுகள் உள்­ளன. அதனை மறைக்க நாம் முற்­ப­ட­வில்லை. அந்த தவ­று­களை பேச்­சு­வார்த்­தைகள் ஊடாக திருத்­திக்­கொண்டு புரிந்­து­ணர்­வுடன் செயற்­ப­டுவோம் என்றே நாம் சக­ல­ரை­யும கோரு­கின்றோம். அதற்­கான கருத்து சுதந்­திரம் இந்த ஆட­சியில் சக­ல­ருக்கும் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அதனால் இந்த தேசிய அர­சாங்த்தின் உறு­தியை மீண்டும் ஒரு­முறை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­கான சந்­தர்ப்­பத்தை பெற்­றுக்­கொ­டுத்த எதிர் தரப்­பி­ன­ருக்கு நன்றி கூறவும் நாம் கட­மை­பட்­டுள்ளோம்.

அதே­நேரம் இந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் பங்­கேற்று உரை­யாற்­றிய இரா­ஜாங்க அமைச்சர் மொஹான் லால் குரேரு தெரி­விக்­கையில்,

நிதி அமைச்சர் மீது கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்கை இல்லை பிரே­ரணை முழு அர­சாங்­கத்­தையும் இலக்கு வைத்து கொண்­டு­வ­ரப்­பட்­டது. அர­சாங்­கத்தின் வயது ஓன்­பது மாதங்கள் மாத்­தி­ர­மே­யா­குமட். அர­சாங்­கத்தின் பலத்தை காட்ட இது ஒரு சந்­த­ரப்­ப­மாக அமைந்­து­விட்­டது.

அதன் பிர­காரம் ஜனா­தி­பதி முறை­மை­யிலும். தேர்தல் முறை­மை­யிலும் அர­சி­ய­ல­மைப்­பிலும் மாற்­றங்­களை மேற்­கொள்­ள­வுள்ளோம்.

இந்த விட­யங்கள் தொடர்பில் நல்­லாட்சி அர­சாங்கம் மீது மக்­க­ளுக்கு நம்­பிக்கை ஏற்­பட்­டுள்­ளது. கடந்த அரசாங்கங்கள் இது தொடர்பில் வாக்குறுதிகளை வழங்கியிருந்தலும் அவர்கள் குறித்த விடயங்களை செய்ய தவறிவிட்டனர். அதேநேரம் கடந்த அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கபட்ட திட்டங்களில் பயனுடைய திட்டஙகளும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

அதேநேரத்த்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தை மீது மக்கள் தவறான கோணத்தில் அவதானிக்கின்றனர். இந்த ஆட்சியின் நீதியான தன்மை வெளிநாடுகளுக்கு தெரியவந்துள்ளது அதனலாலேயே ஜீ 7 மாநாட்டில் எமது ஜனாதிபதிக்கு மகத்தான வறவேற்பு கிடைத்தது. இவ்வாறு சர்வதேசத்திற்கு நாம் முன்னுதாரனமாக இருப்பதாலேயே பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொள்ள முடிந்துள்ளது என்றார்.