Home செய்திகள் இந்தியச் செய்திகள் குழந்தைகளுக்கு தவறாக பாடம் சொல்லி கொடுத்துவிட்டு, வேண்டுமென்றே செய்ததாக சமாளிக்கும் குஜராத் அமைச்சர்

குழந்தைகளுக்கு தவறாக பாடம் சொல்லி கொடுத்துவிட்டு, வேண்டுமென்றே செய்ததாக சமாளிக்கும் குஜராத் அமைச்சர்

4080ae4f-95d8-4a47-bbd6-d629c4392139_S_secvpfகுஜராத் மாநிலத்தின் நகர்ப்புற வீட்டுவசதி, சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் சங்கர் சவுத்ரி. எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் சமீபத்தில் திஷா பகுதியில் அமைந்திருக்கும் அரசு பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வை முடித்துக்கொண்டு திரும்பி வராமல் மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறேன் என்று கூறி கரும்பலகையில் யானை என்பதை ஆங்கிலத்தில் “E-L-E-P-H-E-N-T” என்று எழுதியுள்ளார். Elephant என்பதுதான் சரி. ஆனால் a போட வேண்டிய இடத்தில் e என்று எழுதிவிட்டார்.

இதை யாரோ ஒருவர் புகைப்படமாக எடுத்து இணையத்தில் வெளியிட, அது தீயாக பரவிவிட்டது. இதனால் தர்மசங்கடத்திற்கு ஆளான சங்கர் சவுத்ரி, மாணவர்களின் அறிவை சோதிப்பதற்காக இப்படி செய்ததாக சமாளித்து வருகிறார்.

சங்கர் சவுத்ரி சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல. இவரது எம்.பி.ஏ. பட்டம் போலியானது என்று சர்ச்சை ஏற்பட்டு அது நீதிமன்றம் வரை சென்றது. குஜராத் சட்டமன்றத்தில் ஆபாச படம் பார்த்த குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு.